search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன் விபத்து"

    • 3 பேர் படுகாயம்
    • போக்குவரத்து பதிப்பு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலைக்கு வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுமார் 20 பேர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஏலகிரி மலைக்கு மினி வேனில் சுற்றுலா வந்தனர்.

    வேனை ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திப்குமார் (வயது 34) ஓட்டினார். ஏலகிரி மலையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள், நேற்று மாலை 7 மணியளவில் மலையில் இருந்து கீழே இறங்கினர். 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து பாறையின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் வாலாஜா குடிமல்லூர் பகுதியை சேர்ந்த சாம்பசிவம் மனைவி சாந்தி (65), காட்பாடி தொப்பலாம் மோட்டூரை சேர்ந்த ராம்குமார் (27), எம்பெருமாள் (41) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். 17 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

    தகவலறிந்த ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாலையின் நடுவில் மினி வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

    • ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலியானார்.
    • விபத்து குறித்து சிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் விஜயகுமார் (வயது 20). நேற்று இரவு இவரும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சூர்யாவும் சிக்கல் அருகே உள்ள சிறைக்குளம் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் ெசன்றனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிக்கல் டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து ராமேசு வரத்தில் மீன்லோடு ஏற்றி வந்த வேன் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.இதில் விஜய குமார், சூர்யா ஆகிய 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த விஜய குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய சூர்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துஉடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பைக் மீது வேன் மோதி விபத்து
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 70), ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர், நேற்று காலை பைக்கில் ஆற்காடு வந்தார்.

    பின்னர் மீண்டும் விளாப்பாக்கம் நோக்கி செல்லும் போது தாஜ்புரா கூட்ரோடு அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார்.

    அப்போது 'ஷூ' கம்பெனிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நடராஜ் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச் சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்துக்குள்ளான வேன் மீது மற்றொரு வேன் மோதியது
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட்டில் இருந்து தனியார் கம்பெனி ஊழியர்கள் ஆரணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வீ.சி. மோட்டூர் எம்.பி.டி.சாலையில் வேன் சென்ற போது நடுவே அமைக்கப் பட்டு இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    அப்போது திருத்தணியிலிருந்து சபரிமலை நோக்கி வந்த அய்யப்ப பக்தர்கள் வந்த வேன், விபத்துக்குள்ளான வேன் மீது மோதியது.

    இந்த விபத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் களை ஏற்றி வந்த வேன் தலை குப்புறக்கவிழ்ந்தது. அதில் இருந்த 13 பேரில் 9 பேர் காயம் அடைந்தனர்.

    அதேபோல் அய்யப்ப பக்தர்கள் வந்த வேனில் இருந்த 21 பேரில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    2 வேன்களிலும் காயம் அடைந்த 15 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

    அதில் படுகாயம் அடைந்த அய்யப்ப பக்தர் ஒருவர் மட்டும் வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வாலாஜா போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • டிரைவரின் கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதியது
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூரில் ஷூ கம்பெனி இயங்கி வருகிறது. இந்த ஷூ கம்பெனியில் கலவை அருகே உள்ள பாலி, ராந்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.

    வேலை செய்யும் தொழிலாளர்களை ஷூ கம்பெனி வேன் மூலம் தினமும் கம்பெனிக்கு அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை ஆற்காடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவர் கம்பெனிக்கு சொந்தமான வேனில் 12 பெண்கள் மற்றும் 3 ஆண்களை ஏற்றிக் கொண்டு ஆற்காடு நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    வேன் முள்ளுவாடி கூட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக டிரைவர் வேனை இடது பக்கம் திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வேனில் வந்த ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் கீதா, சிவகுமாரி, சாந்தி, வெண்ணிலா, நந்தினி, கவிதா வேன் டிரைவர் சூர்யா, லோகேஸ்வரன், சிவலிங்கம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து கலவை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் அருகே வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயமடைந்தனர்.
    • மாடு குறுக்கே வந்ததால் வேடிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

    தொண்டி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்

    (வயது 65). இவரது சகோதரர் முருகேசன் என்பவர் இறந்து விட்டார். அவரது அஸ்தியை ராமேசுவரம் சேதுக்கரையில் கரைப்பதற்காக ஒரு வேனில் அவரது குடும்பத்தினர்கள் உள்பட 20 பேர் சென்றனர்.

    அந்த வேன் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பனையூர் பாலம் அருகில் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு சென்றதால் வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 2 சிறுமிகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேனில் பயணம் செய்த மற்றவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. அவர்களை மீட்டு மற்றொரு வேனில் அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கீழே விழுந்து காயம் அடைந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×